கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது…

கோவை: கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

Advertisement

கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பவன்குமார் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அதன்படி கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 26,96,813 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் SIR க்கு பிறகு 1,64,518 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 42,313 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் SIR க்கு முன்பு கோவையில் 3117 வாக்குச்சாவடிகள் இருந்ததாகவும் 1200 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக 446 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் தற்போது 3563 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது நீக்கம் செய்வது திருத்தம் செய்வது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறியீடு செய்வது ஆகிய நடவடிக்கைகளுக்காக http:voters.eci.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் Voter Helpline என்ற செயலை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில்

Advertisement

10 சட்டமன்ற தொகுதிகள்
மொத்தம்- 26,96,813
ஆண்கள்- 13,00,889
பெண்கள்- 13,95,396
மூன்றாம் பாலினத்தவர்- 528

சேர்க்கப்பட்டவர்கள் – (19.12.2025 -30.01.2026)
மொத்தம்- 1,64,518
ஆண்கள்- 77,766
பெண்கள்-86,723
மூன்றாம் பாலினத்தவர்-29

நீக்கப்பட்டவர்கள்
(19.12.2025 -30.01.2026)
மொத்தம்- 42,313
ஆண்கள்- 20,159
பெண்கள்- 22,134
மூன்றாம் பாலினத்தவர்-20

தொண்டாமுத்தூர்
மொத்தம்- 2,87,442
ஆண்கள்- 1,38,968
பெண்கள்- 1,48,371
மூன்றாம் பாலினத்தவர்- 103

கோவை தெற்கு
மொத்தம்- 1,86,509
ஆண்கள்- 90,214
பெண்கள்- 96,263
மூன்றாம் பாலினத்தவர்- 32

கோவை வடக்கு
மொத்தம்-2,91,533
ஆண்கள்- 1,43,383
பெண்கள்- 1,48,122
மூன்றாம் பாலினத்தவர்-28

சிங்காநல்லூர்
மொத்தம்- 2,66,058
ஆண்கள்- 1,28,758
பெண்கள்- 1,37,277
மூன்றாம் பாலினத்தவர்- 23

கவுண்டம்பாளையம்
மொத்தம்- 4,07,507
ஆண்கள்- 1,98,430
பெண்கள்- 2,08,963
மூன்றாம் பாலினத்தவர்- 114

சூலூர்
மொத்தம்- 3,03,541
ஆண்கள்- 1,45,987
பெண்கள்- 1,57,452
மூன்றாம் பாலினத்தவர்- 102

கிணத்துக்கடவு
மொத்தம்- 3,00,486
ஆண்கள்- 1,44,562
பெண்கள்- 1,55,888
மூன்றாம் பாலினத்தவர்- 36

பொள்ளாச்சி
மொத்தம்- 2,02,015
ஆண்கள்- 96,061
பெண்கள்- 1,05,919
மூன்றாம் பாலினத்தவர்- 35

வால்பாறை
மொத்தம்- 1,72,284
ஆண்கள்- 81,504
பெண்கள்- 90,759
மூன்றாம் பாலினத்தவர்- 21

மேட்டுப்பாளையம்
மொத்தம்- 2,79,438
ஆண்கள்- 1,33,022
பெண்கள்- 1,46,382
மூன்றாம் பாலினத்தவர்- 34

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...