சாடிவயலுக்கு அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்- மக்கள் நிம்மதி…

கோவை: கோவை கும்கி யானைகள்யல் யானைகள் முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கும்கி யானைகளால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சிறுவாணி அருகே உள்ள சாடிவயல் யானைகள் முகாம், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், அவ்வப்போது ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கும்கி யானைகள் அங்கு பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து முத்து மற்றும் காவேரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் தற்போது சாடிவயல் முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே சாடிவயலில் இருந்த சில யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், முத்து மற்றும் காவேரியின் வருகை வனத்துறையினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த யானைகள் வரவால் கோவை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை-மனித மோதல்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.