இன்றைய ராசிபலன் | horoscope today

2 ராசிகளுக்கான இன்றைய ( 21.4.2026) ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்

மேஷம்
பணிச்சூழலில் முன்னேற்றமும் உங்கள் மீதான மரியாதையும் கூடும். நீண்ட நாள் முயற்சிகள் இன்று வெற்றியை நோக்கி நகரும். ஆரோக்கியம் மேம்படும். பயணங்கள் மிதமான பலனைத் தரும். மாலையில் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

ரிஷபம்
பணித்துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் செழிப்பிற்கு வழிவகுக்கும். பொருளாதார நிலை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் ஆன்மீக காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

Advertisement

மிதுனம்
பொருளாதார ரீதியாக ஒரு பெண்ணின் உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நிலுவையில் உள்ள திட்டங்களை முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். காதல் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். உடல்நிலை சீராகும்.

கடகம்
நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த திட்டங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரக்கூடும். நிதி விஷயங்களில் நிதானமாக எடுக்கும் முடிவுகள் செல்வத்தைப் பெருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தொடக்கம் உண்டாகும்.

சிம்மம்
உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய இன்று உகந்த நாள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் வந்து சேரும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும்.

கன்னி
புதிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளைப் பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாவதால் நிம்மதி உண்டாகும். பயணங்களின் போது கவனமாக இருப்பது அவசியம். மாலை நேரம் அமைதியாக அமையும்.

துலாம்
இன்று சந்திராஷ்டமம் நிலவுவதால் நிதானம் மிக முக்கியம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம் தொடங்குவதால் மிகுந்த விழிப்புணர்வு அவசியம். முக்கிய முடிவுகளைத் தள்ளி வைப்பது நல்லது. வாகனப் பயணங்களில் வேகம் வேண்டாம். மற்றவர்களிடம் வாக்குவாதங்களை முழுமையாகத் தவிர்க்கவும். நிதானமும் இறை வழிபாடும் இன்றைய நாளைக் கடக்க உதவும்.

தனுசு
பொருளாதார ரீதியாக இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். எதிர்பாராத பணவரவு உங்களை உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத் தேவைகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

மகரம்
குடும்ப விவாதங்களில் உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியான சந்திப்புகள் லாபகரமாக அமையும். குழந்தைகளால் பெருமைப்படும் செய்திகள் வந்து சேரும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

கும்பம்
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் இன்று கைகூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சொத்து ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சுறுசுறுப்புடன் செயல்படும் நாளாக இருக்கும்.

மீனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இன்றைய ராசிபலன் | horoscope today

இன்றைய ராசிபலன் (20.04.2026): 12 ராசிகளுக்குமான பணம், வேலை, குடும்பம் மற்றும் ஆரோக்கிய பலன்களை அறியலாம்.

Video