பயப்படும் அளவிற்கு தண்டனை- சூலூர் சிறுமி வழக்கில் MLA உறுதி…

கோவை: தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு தவறை நினைக்கக்கூட பயப்படும் அளவிற்கு கடுமையானதாக தண்டனை இருக்கும் என MLA சுகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை மாவட்டம் சூலூரில் மாயமான 10 வயது சிறுமி, நேற்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சூலூர் எம்எல்ஏ சுகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இனிமேல் எந்தவொரு குடும்பத்திற்கும், எந்தவொரு ஊரிலும் இப்படி ஒரு துன்பம் நடக்கக்கூடாது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்.

சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவருக்கும் இதர குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

Advertisement

சம்பவம் நடந்த இடத்தில் இதற்கு முன்னரும் சில விபத்துகளும், தற்கொலைகளும் நடந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்தப் பகுதியை நேரில் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

காவல்துறையின் மீதான பொதுமக்களின் அதிருப்தி குறித்த கேள்விக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோபமும் துக்கமும் நியாயமானதுதான். ஆனால், காவல்துறை இந்த வழக்கை டி.எஸ்.பி தலைமையில் மிகவும் தீவிரமாக கையாண்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, இனி தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு தவறை நினைக்கக்கூட பயப்படும் அளவிற்கு மிகக் கடுமையானதாக இருக்கும் என்றார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...