முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர்வு முகாம்- விவரங்கள் இதோ…

கோவை: படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர்வு முகாம் கோவையில் நடைபெற உள்ளது.

Advertisement

09.06.2026 அன்று மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் (The Madras Engineer Group Records) ஆவணக் காப்பகம் நடத்தும் திரளணியில், இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலும் பணியாற்றி போரில் உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் சார்ந்தோர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான ஓய்வூதியம்SPARSH மற்றும் இதர குறைகளுக்கான குறைதீர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

09.06.2026 அன்று காலை 09.00 மணியளவில் பீளமேடு அவினாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எனவே, இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் வீரமங்கையர் (Veer Naris) ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

முகாமிற்கு, படைப்பணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

படைவீரர்கள், வீரமங்கையருக்கான குறைதீர்வு முகாம்.. கோவையில் ஜூன் 9-ல் நடைபெறுகிறது!

முன்னாள் படைவீரர்கள், வீரமங்கையர் மற்றும் அவர்களது சார்ந்தோர்களுக்கான SPARSH ஓய்வூதியம் மற்றும் இதர குறைகள் தொடர்பான சிறப்பு குறைதீர்வு முகாம் ஜூன் 9 அன்று கோவையில் நடைபெற உள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் அழுகை! – VIDEO

கோவையில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...