மேட்டுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு…

கோவை: மேட்டுப்பாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், 12.08.2026 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

அதன் பொருட்டு 05.08.2026 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) அவர்கள் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்கள்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதிவருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) அவர்களிடம் வழங்கலாம். இது தவிர வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு)மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மற்றும் மருதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கொடுக்கலாம்.

Advertisement

மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 12.08.2026 அன்று வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. இப்பகுதி பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

https://www.newscloudscoimbatore.com/announcement-of-the-date-for-the-public-outreach-camp-in-mettupalayam/

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவை: உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது எனக்கு...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை: வாடிக்கையாளர் போல் வந்து ஐஃபோனை களவாடிய பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில்...