கோவையில் கடவுள் போல் வந்து போதை ஆசாமியிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய நாய்! – வீடியோ காட்சிகள்

கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை நாய்கள் கடித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை துடியலூர் அருகே உள்ள என் ஜி ஜி ஓ காலனி, அசோகபுரம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் சாலை ஓரம் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கஞ்சா மது போதையில் இருந்த இளைஞர் மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த நாய்கள் அவனை கடித்தும், குரைத்தும் அப்பெண்ணை காப்பாற்றிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் பூபதி என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள என் ஜி ஜி ஓ காலனி, அசோகபுரம் பகுதியில் நேற்று இரவு ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த சிசிடிவி காட்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் அங்குள்ள ரயில்வே மேம்பாளம் சாலை ஓரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து கொண்டிருப்பதும், அப்போது அந்த வழியாக கஞ்சா மது போதையில் ஒரு இளைஞர் வருவதும் அவரை அங்கிருந்த 2 நாய்கள் குரைத்துக் கொண்டும் இருந்துள்ளது.

Advertisement

அப்போது அந்த பெண்ணிடம் இது உங்க நாயா பாரு பின்னாடியே வந்துட்டு இருக்கு என்கிறார். இதைப் பார்த்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கல் எடுத்து அடிங்க நாய் ஓடிவிடும் இது கூட தெரியாத என்கிறார். அதை கேட்டு அந்த இளைஞர் கல்லை எடுத்து நாயை துரத்துகிறார். ஆனால் அந்த நாய்கள் சில அடி தூரம் போய்விட்டு மீண்டும் அந்த இளைஞரை பார்த்து குரைத்துக்கொண்டே இருந்துள்ளது.

அந்த சமயத்தில் கஞ்சா மது போதையில் இருந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம் போட்டு கத்தியுள்ளார். இந்த இளைஞர் அந்த பெண்ணை நோக்கி செல்லும்போது சுதாரித்துக்கொண்ட நாய் துரத்தி வந்து பெண்ணை காப்பாற்ற முயற்சித்தது. குரைத்தும், கால்களை பிடித்து இழுத்தும் பெண்ணை காப்பாற்றியுள்ளதும். இதையடுத்து பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்த இளைஞரை நாய் துரத்திச் சென்றது.

Advertisement

இதையடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற இளைஞரை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கஞ்சா மது போதை இளைஞர் மானபங்கம் செய்ய முயன்றதும் அப்போது அவருடன் இருந்த நாய் அவனை கடித்தும், குரைத்தும் காப்பாற்றிய அதிசய சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...