துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் உலாவும் நிலையில் சில சமயங்களில் சேதங்களையும் விளைவித்து செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் உலாவி வருகிறது. கதிர் நாயக்கன்பாளையம் கிரீன் பீல்ட் பகுதியில் இரவு நேரத்தில் ஒற்றை காட்டுயானை ஊருக்குள் உலாவி வருகிறது.

Advertisement

தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் இரவு நேரங்களில் ஊர் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.