எஸ்.பி வேலுமணியை அருகில் வைத்து கொண்டு செ.ம.வேலுச்சாமி கூறிய கருத்துக்கள்…

கோவை: திமுக தவெக வை டார்கெட் செய்யுங்கள் என அதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செம வேலுச்சாமி எஸ்.பி.வேலுமணியை அருகில் வைத்து கொண்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செம வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ் பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்தக் கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய செ.ம வேலுச்சாமி, கொங்கு மண்டலத்தை அதிமுகவின் எஃகு கோட்டையான வைத்திருந்து பணியாற்றியவர் எஸ் பி வேலுமணி என்றும் கொங்கு மண்டலத்தின் ஒரே வெற்றி வீரர் அன்பு சகோதரர் எஸ் பி வேலுமணி என்றும் புகழ்ந்தார்.

Advertisement

தற்பொழுது உள்ள ஆளும் கட்சி கூட நமது அதிமுகவின் திட்டங்களை தான் பட்ஜெட்டில் அறிவிக்கிறார்கள் என்றார். நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடைபெற்றது என்பதை குறிப்பிட்ட அவர் எஸ் பிவேலுமணி ஆகியோர் அமைச்சராக இருக்கின்ற பொழுது அதிமுக பொதுச்செயலாளர் முதலமைச்சராக இருந்த பொழுது நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார் என்றும் 7.5% சதவிகிதம் இட ஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார்.

நான் மேயராக இருக்கும்பொழுது கோவையை சிங்கப்பூர் போன்று கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அதனை செய்து காட்டியவர் எஸ் பி வேலுமணி என்றும் கூறினார்.

எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் இல்லை என்னை திட்டினாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன் என் தவறுகளை சுட்டி காட்டினாலும் நான் அதனை ஏற்றுக் கொள்வேன் என்று கூறிய அவர் எனக்கும் வேலுமணிக்கும் உள்ள உறவு யாருக்கும் அரசியல் வரலாற்றிலேயே கிடையாது என்றும் தெரிவித்தார். குடும்ப உறவுகள் போன்று இருந்து வருவதாகவும் அந்த உறவுகளை நான் ஒருபோதும் விட்டது கிடையாது என்றும் கூறினார்.

திமுக கூட்டணி வைத்த 20 ஆண்டு காலம் இருந்து வந்ததாகவும் தற்பொழுது கூட்டணி எல்லாம் போய் அனாதை போன்று நிற்பதாகவும் தமிழக வெற்றி கழகம் கட்சியை எடுத்துக் கொண்டால் அந்த கட்சிக்கு வாக்களித்தவர்களும் அந்த கட்சிக்காக உழைத்தவர்களும் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஏன் இவர்களை ஜெயிக்க வைத்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

வெற்றி பெற்றது முக்கியம் இல்லை என்றும் ஆளுமை திறமை வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர் அனுபவம் உள்ளவர்கள் தான் கட்சிக்கு வேண்டும் என்றும் எடுத்துக் கூறுவதற்கும் ஆளில்லை அதனை கேட்பதற்கும் ஆளில்லை என்ற அளவிற்கு தான் தமிழக வெற்றி கழகம் கட்சி உள்ளது என்று தெரிவித்தார்.

வரக்கூடிய தேர்தல்களில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறக்கூடிய கட்சியாக அதிமுக உள்ளது என்றும் ஏதாவது ஒரு கட்சியை தனித்து போட்டியிட சொன்னால் அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

என்னிடம் எஸ் பி வேலுமணி பேசும் போது கூட மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை பிரச்சனை வேறு இடத்தில் தான் உள்ளது என்று கூறினார் என்றார். இங்கு அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் தயவு செய்து சமூக வலைத்தளங்களில் நம்மைப் பற்றி எந்த ஒரு விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தை தான் நாம் அட்டாக் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கட்சி தலைமையில் சில விஷயங்கள் நம் கையை நேரில் நடைபெறுகிறது என்றும் அதற்காக என்னை ஆதங்கப்படுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்று கூறினார்.

எனக்கு எப்பொழுதும் நல்லது சொல்லி தான் பழக்கம் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது என்பதற்காக சதி செய்யலாம் எடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு கிடையாது என்று கூறினார். எங்களுக்குள் நீங்கள் எந்த ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும் நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் புதிதாக வந்தவர்களை நாம் வரவேற்க வேண்டும் என்றும் அவர்கள் காண ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் 14ஆம் தேதி விவசாயிகள் கடனை தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல தள்ளுபடி செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக கூறிய அவர் அதிமுக ஆட்சி காலத்தில் இரண்டு முறை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற பொழுது அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்து நாம் செய்த போராட்டம் தான் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார். மேலும் எங்களுக்குள் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் நீங்களும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தவெகவிற்கு ஆதரவு ஏன்? வெளிப்படையாக பேசிய எஸ்.பி.வேலுமணி…

கோவை: திமுக எதிர்ப்பு என்பதால் தான் தவெகவிற்கு ஆதரவளித்தோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.