ஸ்டாலினின் உண்மையான முகம் வெளிவந்துவிட்டது- அடுத்த தேர்தலில் மூன்று கட்சிகள் கூட்டணி- அமைச்சர் நிர்மல்குமார்…

கோவை: அடுத்த தேர்தலில் திமுக அதிமுக பாஜக மூன்றும் சேர்ந்து போட்டியிடும் என்றும் மு க ஸ்டாலினின் உண்மையான முகம் நேற்று வெளிவந்துவிட்டது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருப்பதாகவும், தந்தையும் மகனும் உள்ளே இருக்கும் உண்மையான முகம் என்னவோ, விரக்தியின் உச்சத்தில் தன்னிலை மறந்து பேசி இருப்பதாகவும், இனிமேல் அவர்களுக்கு தோல்வி மட்டும்தான், வெற்றியே கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த வயதிலும் இவ்வளவு மோசமாக ஒரு பட்டியலினப் பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசியிருப்பதாகவும், அதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளதாகவும் கூறிய அவர், திமுகவினர் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் எனவே தான் அவர்களை ‘தீய சக்தி திமுக’ என்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதாகவும், சமுதாயத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் என்று விமர்சித்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது தொடர்பான கேள்விக்கு, நாங்கள் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை. அந்தப் பழக்கம் எங்கள் கட்சிக்கும் இல்லை என்று கூறிய அவர், திமுகவிடமிருந்து தவறான தகவல் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், அது போன்ற ஒன்று நடந்தது என்று அவர்கள் நிரூபிக்கட்டும் என்றும், அது போன்ற முயற்சி செய்ய வேண்டிய அவசியம்கூட எங்களுக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

SIR க்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் செய்த ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான் என்றும், கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தவர்களும் நாங்கள்தான் என்றும், தீவிர வாக்காளர் சீர்திருத்தம் சரியாக நடைபெற்றிருந்தால் இந்நேரம் 160 தொகுதிகளில் கூட வெற்றி பெற்று இருப்போம் என்றும் தெரிவித்தார். திமுக ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்து தவறான நடவடிக்கை மேற்கொண்டதால் தான் அவர்கள் எந்த அளவுக்காவது வெற்றி பெற்றார்கள் என்றும், அதனை எதிர்த்து கடுமையாகப் போராடியவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர் தான் என்றும் தெரிவித்தார்.

Advertisement

தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் என்ன பேசுகிறார் என்றே தெரியாமல் பேசி வருவதாகவும், தரம் தாழ்ந்து ஒரு தலைவர் மூன்றாம் நபர், நான்காம் நபர் போன்று பேசி வருவதாகவும், அதுதான் அவர்களுடைய நிலைப்பாடு, அதுதான் அவர்களுடைய ஒரிஜினல் முகம் என்றும் தெரிவித்தார். திமுகவின் அத்தியாயம் இத்துடன் முடிந்து விட்டது என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிமுக தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலைமைதான் திமுகவிற்கும் ஏற்படும் என்றும், அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

இந்தத் தேர்தலில் ஸ்டாலினைக் காண்பித்து ஓட்டு கேட்பார்களா? உதயநிதி ஸ்டாலினைக் காட்டி ஓட்டு கேட்பார்களா? அல்லது அவர்கள் செய்த நல்ல விஷயங்களைக் காண்பித்து ஓட்டு கேட்பார்களா? இதில் எதையுமே காண்பித்து ஓட்டு கேட்க முடியாமல், வக்கிரத்தை காட்டி ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்றும் விமர்சித்தார்.

கேவலமாக மைக்கைப் பிடித்து ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாகவும், மக்கள் இவர்களுக்கு எதை நம்பி வாக்களிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 5 லட்சம் கோடி, 6 லட்சம் கோடி கடந்த காலங்களில் கொள்ளையடித்து உள்ளார்கள் என்பது உண்மைதான் என்றும் கூறினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து தேர்தல்களிலும் திமுக தோல்வியை மட்டுமே தழுவும் என்றும் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவதே மிகவும் கடினம். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

விஜயைப் பற்றி எடப்பாடி பழனிசாமியும் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்போது உள்ள அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் அதிமுக என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை இன்று முட்டுச்சந்திற்கு கொண்டு போய் நிறுத்திவிட்டார் என்றும், இந்தத் தேர்தலிலாவது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவரை மாற்றுவார்களா என்று அவரது கட்சியினரே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்,

அந்தக் கட்சியின் உண்மையான விசுவாசிகள் அந்தக் கட்சியை எடுத்து நடத்துவார்கள் என்று அந்தக் கட்சியினரே கூறி வருவதாகவும் தெரிவித்தார். இனிமேல் அவருக்கும் எந்த ஒரு வெற்றியும் கிடைக்கப் போவதில்லை என்றும், அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போகிறார்கள். இதில் மாற்றுக் கருத்து கிடையாது என்றும் தெரிவித்தார். மூன்று கட்சிகள் சேர்ந்தாவது டெபாசிட் வாங்க முடியுமா என்ற நிலைமைக்குத்தான் செல்லப் போகிறார்கள் என்றும் விமர்சித்தார்.

ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது குறித்தான கேள்விக்கு, இந்த அரசு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. மூன்றரை மாதத்திற்கும் ஜிஎஸ்டி வருவாய் குறைவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? ஜிஎஸ்டி வருவாய் எவ்வாறு வருகிறது என்று ஸ்டாலினுக்குத் தெரியுமா? எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் அவர் பேசி வருகிறார் என்று கூறினார்.

பேரிகேட்டுகள் அமைப்பதற்கு கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருவது குறித்தான கேள்விக்கு, அது பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத்தான் போடப்படுகிறது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவது, தொழில்துறையினரை ஜெனரேட்டர் பயன்படுத்தக் கூறுவது தொடர்பான கேள்விக்கு, நெய்வேலியில் இருந்து ஒன்றியத் தொகுப்புக்கு வரும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. அதனால் தற்காப்பிற்காக ஜெனரேட்டரைப் பயன்படுத்துமாறு தான் கூறியிருக்கிறோம் என்றும், தொழில்துறையினருக்கு எந்த ஒரு மின்சாரத் தடையும் நாங்கள் செய்யவில்லை என்றும், தற்காப்பு காரணமாகவே ஒரு சில பகுதிகளில் அதுபோன்ற அறிவிப்புகளைத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். எந்தெந்த நாட்களில் அந்த மின்சாரம் கிடைக்கவில்லையோ, பீக் ஹவர்ஸில் மட்டும்தான் அதனை கொள்முதல் செய்வதாகவும் கூறினார்.

ஒரு சாட்டேஜ் காரணமாக கடந்த வாரத்தில் ஓரிரு இடங்களில் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் மின்னிறுத்தம் இருந்தது. இருந்தபோதிலும், அது பர்ச்சேஸ் செய்து சரி செய்யப்பட்டுவிட்டது என்று கூறினார். மேலும், சில மாதங்களில் Long Term Purchase டெண்டர் விடப் போவதாகவும் கூறினார்.

சட்டத்துறையில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்ற கேள்விக்கு, பிறகு பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

முதலமைச்சரின் நாளைய வருகை நேரம், ரோடு ஷோ குறித்தான கேள்விக்கு, அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...