கோவை மத்திய சிறையில் வேலை- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோவை மத்திய சிறையில் தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் காலியாக உள்ள இரண்டு தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

இப்பணியிடத்திற்கு 01.07.2026அன்றைய தேதியில் அதிகப்பட்ச வயது வரம்பு General Turn (30) 30 மற்றும் Backward Class (OBCM-32) ஆகும். தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு ஆண் செவிலி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு 1.7.2026 அன்றைய தேதியில் அதிகபட்ச வயது வரம்பு (MBC & DNC-32) ஆகும்.

Advertisement

8-ஆம் வகுப்பு கல்வித் தகுதி அல்லது III Form தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்படி பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட சாதிச் சான்றின் ஜெராக்ஸ் நகலுடன் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, கோயம்புத்தூர்-18 என்ற முகவரியிட்டு 22.10.2026-க்குள் கோயம்புத்தூர் மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்படி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட பணியிடத்தினை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் என மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...