மேகமலை விவகாரம்- மறுபரிசீலனை வேண்டுமென எழுந்துள்ள கோரிக்கை…

கோவை: மேகமலை விவகார உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மேகமலைப் பகுதி மக்களுக்கான உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் பல தலைமுறைகளாக வசிக்கும் பழங்குடியினரை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும், 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என்றும் வன உரிமைச் சட்டம் 2006-ன் படி, 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதிக்கு முன்பு மூன்று தலைமுறைகளாக வனம் சார்ந்து வாழ்கின்ற மக்களை வெளியேற்றக் கூடாது என சட்டம் இருக்கும் போது, அதற்குப் புறம்பாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 10,000-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதல்ல என்றனர்.

ஏற்கனவே 2019-ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வரையில் அவர்களை யாரும் வெளியேற்றக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

எனவே, உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அடிப்படை உரிமைகள் மற்றும் வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகம் விடுமுறை- சுப.வீரபாண்டியன் கண்டனம்…

கோவை: கோவை பெரியார் அறிவுலகம் அரசு விடுமுறை நாட்களில் மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதற்கு சுப. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம், நேற்றும் இன்றும் அரசு விடுமுறை...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...