கோ-கார்ட் போட்டியில், தாய்லாந்தில் இந்தியாவுக்காகக் களமிறங்கும் கோவை சிறுவன் குரு தருண்!

கோவை: சர்வதேச கோ-கார்ட் மோட்டார் பந்தயப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குரு தருண். சிறு வயதிலேயே மோட்டார் பந்தயத்தில் ஆர்வமும் திறமையும் வெளிப்படுத்தி வரும் இவர், தற்போது சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காகக் களமிறங்கத் தயாராகி வருகிறார்.

கோவை ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் குமார் – உமா தம்பதியினர். இவர்களது மகன் குரு தருண், அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisement
Guru Tarun SK

இவரது தந்தை ஒரு கார் பந்தய வீரராக உள்ள நிலையில், சிறு வயதில் இருந்தே குரு தருணும் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

இதனிடையே, கோவை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்ற கோ-கார்ட் பந்தயங்களில் கலந்து கொண்ட குரு தருண் பதக்கங்களை வென்றார். மேலும், கோவை கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வே கோ-கார்ட் மைதானத்தில், குறைந்த நேரத்தில் கார்ட் ரேசிங்கை முடித்து சாதனை படைத்துள்ளார்.

Advertisement

இதன் மூலம், இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பான எஃப்.எம்.எஸ்.சி.ஐ. மூலம், தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் மோட்டார்ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் கலந்து கொள்ள குரு தருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Guru Tarun SK

கோ-கார்ட் பந்தயத்தில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்க உள்ள குரு தருண், தந்தையைப் போலவே பல கார் பந்தயங்களில் கலந்து கொண்டு, எஃப்.1. பந்தய வீரராக வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார்.

Advertisement

பொதுவாகவே மோட்டார் பந்தயப் போட்டிகள் வேகம், துல்லியம், கவனம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றைச் சோதிக்கும் களமாகும். இந்தப் போட்டிக்காக மகனைத் தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்த குரு தருணின் தாய் உமா, ஆரம்பத்தில் கார் பந்தயம் குறித்து அச்சப்பட்டதாகவும், இப்போது அந்த அச்சங்கள் மறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

Guru Tarun SK

12 வயதிலேயே சர்வதேச மோட்டார் பந்தயப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ள கோவை சிறுவனுக்குப் பள்ளி நிர்வாகம், குடும்பத்தினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிறு வயதிலேயே சர்வதேச விளையாட்டு அரங்கில் தடம் பதிக்கத் தயாராகும் குரு தருண், இந்தியாவுக்கும் கோவைக்கும் பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...