1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை- மத்திய அரசு திட்டத்தின் அறிவிப்பு…

Advertisement

கோவை: கோவை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகைக்கான மத்திய அரசின் PM YASASVI திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கும் PM YASASVI திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,25,000 வரையும் கல்வி மற்றும் விடுதிக் கட்டண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 30 சதவீதம் மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியான பள்ளிகளில் பயில்பவராகவும் இருக்க வேண்டும்.

கடந்த 2025–26ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள், நடப்பு 2026–27ஆம் கல்வியாண்டில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வந்தால், தங்களது உதவித்தொகையைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

Advertisement

இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 15ஆம் தேதியாகும்.

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளமான “National Scholarship Portal” (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...