கோவை: கோவை மாநகரில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் பொறுப்பு காவல் ஆணையர் நடை ரோந்து சென்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.
காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் (பொறுப்பு) கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதி மற்றும் காவல் துணை ஆணையர் (தெற்கு) கார்த்திகேயன் கோவை மாநகர் உக்கடம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பி1 கடைவீதி மற்றும் பி4 உக்கடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிகூண்டு பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பு, பிக் பஜார் வீதி வழியாக டவுன்ஹால்ஒப்பணக்கார வீதி சந்திப்பு RG வீதி சந்திப்பு வழியாக வைசியாள் வீதி வழியாக நடை ரோந்து பணி நடைபெற்று,
நடை ரோந்து பணியில் வருகின்ற தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் பகுதியான ஒப்பணக்கார வீதி சந்திப்பில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும்காவல் துறை அதிகாரிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற தடுப்பு நிகழ்வுகளை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும், பகல் நேரத்தில் காவலர்களின் ரோந்து பணியினை அதிகரிப்பதற்கும் அதிகப்படியான CCTV கேமராக்கள் பொறுத்தி கண்காணிப்பதற்கும்
மக்கள் அதிகம் கூடும் பகுதியில் காவற்கோபுரம் (Watch Tower) அமைத்து பொது ஒலிப்பரப்பி மூலம் பொதுமக்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இது குறித்து தினமும் காவல் நிலைய ஆஜர் அணிவகுப்பில் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.





