SIR விவகாரம்- கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் காவல்துறையினரை கண்டித்தும் கோவையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் காவல்துறையினர் பெருமளவுக்கு வைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர் தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் வலுக்கட்டாயமாக கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை பதவி விலக வலியுறுத்தியும், SIR நடைமுறையை கைவிட வேண்டும் பறிக்கப்பட்ட வாக்குரிமைகளை திரும்ப வழங்கிட வேண்டும் இது குறித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் இளைஞர்களை கொடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் சிவில் உரிமை கழகம், இந்திய வழக்குரைஞர்கள் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி பாஜக அரசை கண்டித்தும் காவல்துறையினரை கண்டித்தும் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...