கோவையில் உரம் தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவையில் உரம் தயாரிப்பு மையங்கள், மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் உரம் தயாரிப்பு மையங்கள் மற்றும் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு, வடிகால் கட்டமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கோவை மாநகராட்சியின் 74-வது வார்டுக்கு உட்பட்ட பனைமரத்தூர் மற்றும் 72-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், சச்சிதானந்தம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள குப்பைகளைத் தரம் பிரிக்கும் பொருள் மீட்பு மையங்களை (Material Recovery Facility) அவர் ஆய்வு செய்தார்.

மேலும், 72-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி சாலை பகுதியில் உள்ள இசை கலைஞர்கள் வளாகம், ஹாக்கி மைதானம், வாழைக்காய் மண்டி வளாகம் மற்றும் 71-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள உழவர் சந்தை வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களின் (Micro Composting Centre) செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.

Advertisement

தொடர்ந்து, 38-வது வார்டுக்கு உட்பட்ட பட்டணம் ஓணாப்பாளையம், மருதமலை சாலை, ஐஓபி காலனி, டி.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், 38-வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலை, பொம்மணாம்பாளையம் பகுதி மற்றும் 36-வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலை, மலை நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் நிர்மலா, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் சந்திரா, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் நிர்மலா, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...