கோவையில் குடிக்க டீ போட்ட 16 வயது மாணவர் பலி!

கோவை : கோவை போத்தனூரில் உள்ள அரபி கல்லூரி விடுதியில் டீ தயாரிக்க முயன்றபோது, உடையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்த 16 வயது மாணவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை போத்தனூர் என்பி இட்டேரி 7-வது வீதியைச் சேர்ந்த ஷெரீப் என்பவரின் மகன் முகமத் ஹூசைனார் (16). இவர், போத்தனூர் வசந்தம் நகரில் உள்ள அரபி கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அவர், நேற்று முன்தினம் தனது அறையில் டீ தயாரிப்பதற்காக கியாஸ் அடுப்பை லைட்டர் மூலம் பற்ற வைத்துள்ளார்.

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவியதால், வலியால் துடித்த மாணவர் அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சக மாணவர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள், தீயில் சிக்கிய அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி முகமத் ஹூசைனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் டீ தயாரிக்க முயன்றபோது மாணவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...