கோவை: கோவையில் SIR படிவத்திற்கு இறுதிச்சடங்கு நடத்துவது போல் மாலை அணிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
SIR படிவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இறுதிச்சடங்கு நடத்துவது போன்று மாலை மற்றும் மலர் வளையம் வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
SIR விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று SIR திட்டம் மற்றும் அதற்கான படிவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், படிவத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து இறுதிச்சடங்கு நடத்துவது போன்ற நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது SIR திட்டத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
SIR விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மேற்கொண்ட இந்த நூதனப் போராட்டம் கவனத்தை ஈர்த்தது.






