வடகிழக்கு பருவமழை- அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் கூறியுள்ள அறிவுறுத்தல்…

கோவை: பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தின் செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த மண்டல மாநாடு நடைபெற்றது.

Advertisement

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கிராமப்புற வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் சுகுமார், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், 2026–27ஆம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கைப் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், மழைக்கால அவசரத் தேவைகளுக்கான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

மேலும், பொதுமக்களின் மனுக்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியாகும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வட்டார அளவிலேயே தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் வெளிப்படையாக நடைபெறுவதுடன், வளர்ச்சிப் பணிகளின் தரத்தில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்றும் எச்சரித்தார். அரசு அலுவலர்கள் நேர்மையுடனும் பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், மக்களுக்குச் சேவை செய்வதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்கள், முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் மற்றும் அவர் கேரளாவுக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அமைச்சர், அது தொடர்பான முழு விவரங்களும் மாலையில் தெரிவிக்கப்படும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நிறுவனங்களில் ஆயுதபூஜை வழிபாடு…

கோவை: தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...