அப்துல் கலாம் பிறந்தநாள்- KGF திட்டம் தொடங்கிய MLA கனிமொழி…

கோவை: முன்னள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி பட்டதாரி மாணவர்களை தன்னார்வலர்களாக் கொண்டு
KGF திட்டத்தை MLA கனிமொழி தொடங்கினார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி கே ஜி எப் என்னும் கவுண்டம்பாளையம் கவர்னஸ் பெல்லோசிப் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ். இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்த பட்டதாரி மாணவர்களுக்கு பயிற்சிக்கான அடையாள அட்டையினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

தழிழக வெற்றிக் கழகத்தின் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான கனிமொழி சந்தோஷ் தனது தொகுதிக்காக ஈசாவுடன் இணைந்து பசுமை கவுண்டம்பாளையம், தொகுதி பிரச்சனைகளை கட்சி உறுப்பினர்கள் மூலம் கண்டறிந்து தீர்வு கான ஜனநாயகன் பாஸ்போர்ட் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் படித்த பட்டதாரி மாணவர்களைக் கொண்டு அரசு நிர்வாகம், அரசின் திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும் பொதுக் கொள்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு, அவற்றில் நேரடியாகப் பணியாற்றுவதற்கான ஒரு பயிற்சி மற்றும் பணிவாய்ப்பு திட்டமாக கே ஜி எப் என்னும் கவுண்டம்பாளையம் கவர்னஸ் பெல்லோசிப் என்னும் திட்டத்தை காமராஜர் பிறந்தநாள் அன்று அறிவித்திருந்தார்.

Advertisement

இந்த திட்டத்தில் தன்னார்வளாக இணைய சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படித்த பட்டதாரி மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் முதல் கட்டமான 20 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழக்கறிஞர், ஆடிட்டர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி துடியலூரில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்த பட்டதாரி மாணவர்களுக்கு பயிற்சிக்கான அடையாள அட்டையினை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவர்களிடம் பேசும்போது இதை வாய்ப்பாக எண்ணாமல் கற்றுக் கொள்ளும் பாடமாக பாருங்கள், நீங்கள் கற்றுக் கொள்வதைவிட உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளவுள்ளேன் என்றார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது இத்திட்டத்தில் தன்னார்வளர்களாக இணைந்துள்ள மாணவர்கள் பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளனர். இது குறிப்பாக தமிழ்நாடு அரசு எவ்வாறு செயல்படுகிறது, குடிமக்களின் பொறுப்பு என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இணைந்துள்ள மாணவர்களின் கனவுகளை நனவாக்க எனது தலைமையில் இதை உருவாக்கியுள்ளோம். அனைவரையும் தலைவர்களாக உருவாக்குவதே எனது குறிக்கோள் என்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நிறுவனங்களில் ஆயுதபூஜை வழிபாடு…

கோவை: தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...