கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…

கோவை: கோவையில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது

கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (17.10.2026) ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் பொதுமக்கள் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதுதவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இடி, மின்னல் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனவரி 4ல் இறுதி வாக்காளர் பட்டியல்- கோவை மக்கள் செய்ய வேண்டியது என்ன?

கோவை; கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 4-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...