கோவை: கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் செரா ஆரோன் ஒரே மாதத்தில் மூன்று உலகச் சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். இளம் வயதிலேயே தனது அபார நினைவாற்றல் மற்றும் திறமையால் சாதனை படைத்த சிறுவனை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் சிறுவனை நேரில் சந்தித்துப் பாராட்டி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கோவையைச் சேர்ந்த சிறுவன் செரா ஆரோன் ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான திருக்குறள்களை ஒப்பித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும், ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரை தொடங்கும் மோட்டார் சைக்கிள்களின் பெயர்களை வெறும் 6.82 வினாடிகளில் ஒப்பித்துத் தனது நினைவாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரை தொடங்கும் கார் பெயர்களை 26 வினாடிகளில் ஒப்பித்துச் சாதனை படைத்துள்ளார்.
இத்தகைய வியக்கத்தக்க உலகச் சாதனைகளைப் படைத்த சிறுவன் செரா ஆரோனை நேரில் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சிறுவனின் திறமையைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், சிறுவன் தனது சாதனைகளுக்காகப் பெற்ற பதக்கங்களையும் விருதுகளையும் கனிமொழியின் கைகளால் பெற்றுக்கொண்டு மகிழ்ந்தார்.
“இளம் வயதிலேயே இத்தனை சாதனைகளைப் படைத்துள்ள சிறுவன், எதிர்காலத்திலும் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து, தனது பெற்றோருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” கனிமொழி சந்தோஷ் வாழ்த்தினார்.






