மனம் உடைந்து போன தேவா… ரஜினி செய்த பேருதவி; நன்றிக்கடன் பட்ட குடும்பம்

கோவை: தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி இசையமைப்பளராக வலம் வந்த தேவாவின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இவரது வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தும் செயலை செய்துள்ளார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் இளையராஜா,ஏஆர் ரகுமான், யுவன், அனிருத் என எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் தேனிசை தென்றல் தேவா தான். தேவநேசன் சொக்கலிங்கம் தான் இவருடைய நிஜ பெயராகும். 450க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைசத்து சாதனை படைத்துள்ள இவர், இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக காலமானார்.

Advertisement

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள மாங்காடு கிராமத்தில் நாளை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

கானா பாடல்

Advertisement

தேவா ஆற்காட்டில் பிறந்து இருந்தாலும், அவர் வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் காட்டி வந்த இவர், சென்னை கானா பாடல்களிலும் கவனம் செலுத்தி வந்தார். ஆரம்பத்தில் நாடகங்களுக்கு இசையமைத்து வந்த தேவா, தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஹார்மோனியத்தை இசைக்க கற்றுக் கொண்டார்.

அப்போது முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வந்த சந்திர போஸூடன் இணைந்து, ‘போஸஸ் தேவா’ என்ற இசைக்குழுவை துவக்கினார். இவர்கள் இருவரும் 1977ல் மதுர கீதம் என்ற படத்திற்கு இசையமைத்தனர். இவர்களின் இசைப்பயணம் அதோடு முடிந்தது. அதன்பிறகு, தூர்தசனில் ஃப்ளோர் அசிஸ்டென்டாக பணியாற்றினார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பியானோ,ஹார்மோனியத்தையும் கற்றுக் கொண்டார்.

வெள்ளித்திரை

ஒருகட்டத்தில் பக்தி பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்த தேவாவுக்கு, துவக்கத்தில் 13 படங்கள் இசையமைக்க ஒப்பந்தமாகியும், அது பாதியில் நின்று போகும் நிலை உருவானது. இதையடுத்து, சினிமா வாய்ப்புகள் அவருக்கு அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. 1986ல் வெளியான மாட்டுக்கார மன்னாரு படம் தான் வெள்ளித்திரையில் இவர் இசையமைத்த முதல் படமாகும். அதன்பிறகு, மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு ஆகிய படங்கள் தேவாவுக்கு இசையமைப்பாளராக ஒரு அந்தஸ்து கொடுத்தது.

டைட்டில் கார்டு

தொடர்ந்து, பிரபு, சத்தியராஜ், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் இசையமைத்து வந்த தேவா, ரஜினி காந்துடன் முதன் முதலாக அண்ணாமலை படத்தில் கைகோர்த்தார். இந்தப் படம் தேவாவின் இசையின் மூலம் வெற்றியைத் தேடித் தந்தது என்றே சொல்லலாம். இந்தப் படத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று தேவா போட்ட டைட்டில் தான், அண்மையில் வெளியான ஜெயிலர் 2 வரையிலும் ரஜினியின் டைட்டில் கார்டாக பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து, ரஜினி நடித்த பாட்சா திரைப்படத்திலும் தேவா இசையில் மிரட்டி இருப்பார். படத்தின் வெற்றியில் எங்களுக்கு 50 சதவீத பங்கு என்றால், மீதி 50 சதவீத பங்கு தேவாவின் இசைக்கு தான் என்று ரஜினியே பல இடங்களில் புகழ்ந்து பேசியுள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜயாகாந்த், பிரசாந்த் என பல்வறு நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, அவர்களுக்கு பல வெற்றி பாடல்களையும் தேவா கொடுத்துள்ளார். சுமார் 450 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார். காதல் பாடல்களை கூட குத்து பாடல்கள் பாணியில் கொடுப்பதில் தேர்ந்தவர்.

பட்டம் வந்தது எப்படி?

அவர் சினிமாவில் கோலோச்சும் காலத்தில், இளையராஜா, ஏஆர் ரகுமான் என இரு ஜாம்பவான்கள் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு மத்தியில் கானா பாடல்களின் மூலம் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையைப் போட்டுக் கொண்டார். இதனால், தேவாவிற்கு தேனிசை தென்றல் என்ற பட்டத்தை மெல்லிசை மாமன்னர் எம்எஸ் விஸ்வநாதன் சூட்டினார்.

இசைக் குடும்பம்

தேவா குடும்பத்தில் இவர் மட்டும் இசையமைப்பாளர் இல்லை. அவரது சகோதரர்கள் சபேஷ், சம்பத் மற்றும் முரளியும் இசையமைப்பாளர்கள் தான். இவர்கள் இருவரும் தேவாவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர். சம்பத்தின் மகன் தான் நடிகர் ஜெய். இவரும் ஒரு இசையமைப்பாளர் தான். தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவாவும் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருக்கக் கூடியவர்.

கைகொடுத்த ரஜினி

தேவாவின் மறைவுக்கு பிறகு, அவருடன் பணியாற்றியது குறித்தும் பல பிரபலங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதுபோன்ற சூப்பர் ஸ்டார் ரஜினியும் இரண்டரை நிமிட வீடியோவை வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார்.

தேவாவின் இசை வாழ்க்கையில் ரஜினியின் பங்கு மிகவும் முக்கியமானது. 2002ம் ஆண்டின் போதே தேவா 300 படங்களுக்கு இசையமைத்து விட்டார். யுவன், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோரின் வருகையால், தேவாவுக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் பொதுமக்களுக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்த துவங்கினார். ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், நிகழ்ச்சிகள் ரத்து செய்யும் அளவுக்கு சென்றன. இது அவருக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இது பற்றி நடிகர் ரஜினியிடம் வேதனையை பகிர்ந்தார்.

நான் வர்றேன்

இதனைக் கேட்ட ரஜினியோ, உங்கள் இசை நிகழ்ச்சிகிகு தான் சிறப்பு விருந்தினராக வருவதாக விளம்பரம் செய்யச் சொன்னார். அதன்படியே விளம்பரம் செய்யப்பட்டது. தேவாவின் பிறந்த நாளையொட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் திட்டமிட்டபடி, நிகழ்ச்சியும் துவங்கியது. ரஜினி பங்கேற்றதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன்பிறகு, தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் அவர் பங்கேற்று, பிஸியாகவே இருந்தார். சினிமா வாழ்க்கையின் சரிவை சந்தித்து வந்த போது, ரஜினி செய்த காரியம் தேவாவுக்கு மட்டுமின்றி, அவரது குடும்பமே நன்றிக்கடன் பட்டுள்ளது.

தேவாவின் மறைவு குறித்து செய்தியறிந்து உடைந்து போன ரஜினி, உடனே அவரது வீட்டுக்கு சென்று தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ஜனவரி 4ல் இறுதி வாக்காளர் பட்டியல்- கோவை மக்கள் செய்ய வேண்டியது என்ன?

கோவை; கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 4-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...