தேவா அடக்கம் செய்த ஈரம் காய்வதற்குள் அவரது வீட்டில் மற்றொரு துக்கம்; மீள முடியாத துயரத்தில் குடும்பத்தினர்…!

கோவை: சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவா அடக்கம் செய்த மறுநாளே அவரது இல்லத்தில் மற்றொரு சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Advertisement

காற்றில் கலந்த கானா

தமிழ் திரையுலகில் இளையராஜா,ஏஆர் ரகுமான், யுவன், அனிருத் என எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் தேனிசை தென்றல் தேவா தான். தேவநேசன் சொக்கலிங்கம் தான் இவருடைய நிஜ பெயராகும். 450க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைசத்து சாதனை படைத்துள்ள இவர், கடந்த 17ம் தேதி காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக காலமானார்.

Advertisement

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவரது உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள மாங்காடு கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

உருக்கம்

Advertisement

‘தனது தந்தைக்கு கொடுத்தது போன்ற இடத்தை தனக்கும் மக்கள் கொடுக்க வேண்டும். அவர்களுக்காக நான் இன்னும் பல பாடல்களை தருவேன்,’ என்று ரசிகர்களிடம் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் உருக்கமாக கூறினார்.

மற்றொரு சோகம்

தேவாவின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து அவரது குடும்பத்தினர் இன்னும் மீளவில்லை. தேவா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஈரம் இன்னும் காய்வதற்குள், அவரது குடும்பத்தில் மற்றொரு பிரபலம் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும், வேதனையிலும், துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தேவா குடும்பத்தில் இவர் மட்டும் இசையமைப்பாளர் இல்லை. அவரது சகோதரர்கள் சபேஷ், சம்பத் மற்றும் முரளியும் இசையமைப்பாளர்கள் தான். இவர்கள் மூவரும் தேவாவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர். இவர்களில் சபேஷூக்கு கார்த்திக் சபேஷ் என்ற மகனும், கீதா சபேஷ், அர்ச்சனா சபேஷ் ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

சரியாக

இசையமைப்பாளரான சபேஷ், சகோதரர்களான தேவா மற்றும் முரளி ஆகியோருடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு அக்.,23ல் காலமானார். சரியான ஓராண்டு ஆகும் தருவாயில் அண்ணன் தேவாவும் காலமானார். அதோடு, சபேஷின் மகனான கார்த்திக்கும் நேற்று உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இசை குடும்பத்தில் பிறந்த கார்த்திக்கிற்கு இசை மீது அவ்வளவு ஆர்வம் இல்லை. சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் வல்லவன், தம், குளிர் 100, பட்டத்து யானை ஆகிய படங்கள் இவர் நடித்ததில் முக்கியமான படங்களாகும்.

டயாலிஸிஸ் போன்ற சிகிச்சைக்களை பெற்று வந்த அவர், உடல்நலப் பிரச்சினையால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரு வாரங்களாக இவரது உடல்நிலை மிகவும் கவலைகிடமாகியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இறுதிச்சடங்கு

இந்த நிலையில், நேற்று இரவு திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபாமாக உயிரிழந்தார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சகோதரரும், நடிகருமான ஜெய் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த தேவாவின் தம்பி மகன் கார்த்திக்கிற்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், பிரிஷானிதாரா, ஹைரானிதாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்கு வளசரவாக்கம் மயானத்தில் இன்று மாலை நடந்தது.

தேவாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தில் 37 வயதுடைய மற்றொரு நபரும் உயிரிழந்திருப்பது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

மனம் உடைந்து போன தேவா… ரஜினி செய்த பேருதவி; நன்றிக்கடன் பட்ட குடும்பம்

கோவை: தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி இசையமைப்பளராக வலம் வந்த தேவாவின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இவரது வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தும்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...