நடிகை ஸ்ரீதேவிக்கு நடந்ததைப் போல மற்றொரு சம்பவம்… ஏர் ஆம்புலன்ஸில் வந்த நடிகை!

மும்பை: வெளிநாட்டில் முன்னணி நடிகை ஸ்ரீதேவிக்கு நிகழ்ந்ததைப் போலவே, பிரபல ஹிந்தி நடிகை ஒருவருக்கு சோகமான சம்பவம் நிகழ்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

2018ல் அதிர்ச்சி

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. தன்னுடைய 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சுமார் 50 ஆண்டு காலம் சினிமாவில் கோலோச்சினார்.

Advertisement

சினிமா துறையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாய் சென்றிருந்த போது, உயிரிழந்தார். அங்குள்ள ஒரு ஓட்டலின் கழிவறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். ஆரம்பத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்தது தெரிய வந்தது. இதனால், அவர் மது அருந்திய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதியானது.

மற்றொரு சம்பவம்

Advertisement

வெளிநாட்டில் நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்த சம்பவம் இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் மற்றொரு இந்திய நடிகைக்கு நேர்ந்துள்ளது.

ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நுஷ்ரத் பருச்சா. 41 வயதான இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் 2006ம் ஆண்டு வெளியான ‘ஜெய் சந்தோஷி மா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.2011ம் ஆண்டு வெளியான ‘பியார் கா பஞ்சநாமா’ என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து, சோனு கே டிட்டு கி ஸ்வீடி, ட்ரீம் கேர்ள், சலங், ஜத் கி ஹத், அக்கேலி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பிற்காக ஹிந்தித் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

பாலியில்…

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், வேலை சம்பந்தமாக இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய வேலை முடிந்த நிலையில், சற்று ஓய்வு எடுப்பதற்காக, அங்கேயே விடுமுறையை நீட்டித்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் நுஷ்ரத் பருச்சா சிக்கியுள்ளார்.

இதையடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் அவருக்கு முதுகு தண்டுவட எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் நிற்க கூட முடியாத நிலை உருவானது. எனவே, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு நேர்ந்த விபத்து குறித்து விரிவான தகவலை ஏதும் நுஷ்ரத் தரப்பில் இருந்து பொதுவெளியில் வெளியிடவில்லை.

ஏர் ஆம்புலன்ஸில்…

நிலைமை மோசமான நிலையில், நுஷ்ரத்திற்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில், பாலியில் உள்ள மருத்துவமனையில் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை மட்டும் நுஷரத் மேற்கொண்டனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மும்பைக்கு அழைத்து வரப்பட்டார்.

மும்பை விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் முழு ஆயத்த பணியில் இருந்தனர். ஸ்டிரெச்சரில் படுத்த படுக்கையாக வந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் முக்கிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரார்த்தனை

படுத்த படுக்கையாக வந்திறங்கிய நடிகை நுஷ்ரத் பருச்சாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாகினர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, நடிகை நுஷ்ரத் பருச்சாவின் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த இக்கட்டான சூழலில் அவரது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். சிகிச்சையில் கவனம் செலுத்த அவரை அனுமதிக்க வேண்டும்,” என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டைகர் ஷெராப்

பாலிக்கு புறப்படுவதற்கு முன்பாக, நடன இயக்குநரும், சினிமா இயக்குநருமான ரெமோ டி’சோசா இயக்கத்தில், நடிகர் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக பெயரிடப்படாத திரில்லர் படம் ஒன்றில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறையாகும். விரைவில் நுஷ்ரத் பருச்சாவுக்கு நிகழ்ந்தது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Amazon Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

கோவையில் துவங்கிய குரூப் 1 தேர்வு

கோவை: கோவையில் குரூப் 1 தேர்வு துவங்கியது. குரூப் 1 தேர்வு கோவையில் 17 மையங்களில் நடைபெறுகிறது 11 ஆயிரம் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்றைய தினம் குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. கோவையில் 17...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...