பெரியார் அறிவுலகம் விடுமுறை- சுப.வீரபாண்டியன் கண்டனம்…

கோவை: கோவை பெரியார் அறிவுலகம் அரசு விடுமுறை நாட்களில் மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதற்கு சுப. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம், நேற்றும் இன்றும் அரசு விடுமுறை என்பதால் மூடப்பட்டுள்ளது. இதனை அறியாத பல்வேறு பொதுமக்கள் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட வந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Advertisement

இந்த நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், எழுத்தாளர் கவுதமன் உள்ளிட்ட அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வருகை புரிந்தனர்.

அப்போது, அரசு விடுமுறை நாட்களில் பெரியார் அறிவுலகம் மூடப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அதேசமயம், பெரியார் அறிவுலகத்தை அமைக்கக் காரணமாக இருந்த திமுக அரசையும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப. வீரபாண்டியன், “பெரியார் அறிவுலகத்தை யார் திறந்து வைத்தார்கள் என்பதைவிட, யார் இதனை உருவாக்கினார்கள் என்பதுதான் வரலாற்றில் இடம்பெற வேண்டிய குறிப்பு. இந்த அறிவுலகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் நண்பர்களுடன் வந்தேன்.

குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தேன். விடுமுறை நாள் என்பதால் நீண்ட நேரம் இங்கு பார்வையிடலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், நவராத்திரி, விஜயதசமி ஆகியவற்றைக் காரணம் காட்டி அறிவுலகம் மூடப்பட்டிருப்பது, இந்த அரசு எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

Advertisement

நூலகங்கள் விடுமுறை நாட்களில்தான் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைவரும் வந்து படிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். அனைவரும் படித்துவிடுவார்களோ என்று அரசு அச்சப்படுகிறதா என்று தெரியவில்லை. இந்த நிகழ்வு அறிவுலகத்திற்கு எதிரானதாக உள்ளது. மூடநம்பிக்கையின் அடிப்படையில் அறிவுலகம் மூடப்பட்டிருப்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

விடுமுறை நாட்களிலும் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பயன்படக்கூடிய இந்த அறிவுலகத்திற்குத் தடையாக இருக்க வேண்டாம்” என்றார்.

பெரியார் அறிவுலகம் நூலகத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அரசு விடுமுறை நாட்களில் மூடப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த சுப. வீரபாண்டியன், “இதற்கு விளக்கம் தேவையில்லை. மக்களுக்கு எது பயன்படும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் எது பயன்பட வேண்டும் என்பதுதான் முதன்மையானது. எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறலாம். ஆனால், விளக்கத்திற்காக அல்ல மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக விடுமுறை நாட்களிலும் பெரியார் அறிவுலகம் திறந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பள்ளி கல்வி- மத்திய மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு மற்றும் கோரிக்கை வைத்த அண்ணாமலை…

கோவை: பள்ளி கல்வி விஷயத்தில் மத்திய அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கோவை மாவட்டம் கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...