கோவையில் போதை மாத்திரை விற்பனை- 5 பேர் கைது…

கோவை: கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ரூ.7.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாநகரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7.5 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள 2,980 போதை மாத்திரைகள், 2.5 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிங்காநல்லூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் கருப்பராயன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 5 பேர் நின்றுகொண்டிருந்தனர்.

இதையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

Advertisement

தொடர்ந்து, அவர்கள் மதுரையைச் சேர்ந்த மாதவன் (23), கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ரபீகர் (22), ஜெயராஜ் என்ற தொட்டி ஜெயா (28), ஆகாஷ் (19), தமிழரசன் (20) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2,980 போதை மாத்திரைகள், 2.5 கிலோ கஞ்சா, ஊசிகள் மற்றும் 6 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு மட்டும் ரூ.7.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் யாருக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டன, இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பல்லடத்தில் காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலி!

பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...