அரசியல் என்ட்ரியால் குடும்பத்தில் தனுஷூக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்; கடந்து சென்று கரையேறுவாரா?

கோவை: அரசியலுக்குள் நுழைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நடிகர் தனுஷூக்கு, பாஜக கொடுத்த அட்வைஸினால், குடும்பத்தில் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை எல்லாம் கடந்து அரசியலில் கரையேறுவாரா தனுஷ் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Advertisement

நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது. இதில், முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். அரசியல் கட்சி துவங்குவதற்கான பணிகளை அவர் வெளிப்படையாக செய்து வருகிறார். திருவள்ளூரில் நடந்த தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய பேச்சுக்கள் மூலம், முதல்முறையாக அவரது அரசியல் ஆசை வெளிப்பட்டது.

விஜய் பாணியில்…

Advertisement

விஜய்யும் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தற்போது தனுஷூம் அதே பாணியை கையில் எடுத்து இருக்கிறார். தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பை தொடர்ந்து பிரமாண்டமாக நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்திலும், நமது கூட்டத்திற்கு ஒரு நோக்கம் இருப்பதாக அவர் பேசியிருந்தார். தன்னுடைய பிறந்த நாளன்றும் தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்தித்தார். மேலும், நற்பணி மன்றத்தை தொகுதி வாரியாக வலுப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார். சூட்டிங் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களை வரவழைத்து தன்னுடைய மவுசை காட்டி வருகிறார் தனுஷ்.

தனுஷின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக எழுச்சிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் தனுஷ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2031 அல்லது 2036 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து நடிகர் தனுஷ் தற்போது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். அடுத்த வாரம் தனது இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது.

Advertisement

இந்த நிலையில், அரசியல் களத்திற்கு வர முடிவெடுத்துள்ள நடிகர் தனுஷூக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளார்களாம். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் நடந்த இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜ அட்வைஸ்

இது ஒருபக்கம் இருக்க, கடந்த வாரம் டெல்லிக்கு சென்றிருந்த தனுஷ், அரசியல் தொடர்பாக சிலரை சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியானது. 2029 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்கு வரும் போது, பலமிக்க முதல்வர் விஜய்யையும், பல ஆண்டுகள் ஆண்ட திமுகவையும் ஒரே சமயத்தில் அவர் எதிர்க்க வேண்டியிருக்கும். எனவே, இந்தக் கட்சிக்கு மாற்றாக இருக்கும், மத்தியில் ஆளும் பாஜவின் ஆதரவு தேவை என்று தனுஷ் கருதுவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பாஜக தலைவர்கள் சிலரை அவர் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, ரஜினியின் ஆதரவை பெறுமாறு தனுஷூக்கு பாஜகவினர் அட்வைஸ் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது; தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் உள்ளார். இவர்களின் செல்வாக்குக்கு இணையாக வேறு எந்த நடிகர்களையும் சொல்ல முடியாது. இதில், அரசியலில் ரஜினி தனக்கான இடத்தை தவற விட்டு விட்டார். இப்போது, அந்த இடத்தை விஜய் பிடித்து விட்டார். ரஜினியின் ஆதரவு இல்லாமல் விஜயை எதிர்க்க முடியாது. எனவே, நீங்கள் ரஜினியின் ஆதரவை பெற்றால் தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும், என்று கறாராக கூறி விட்டார்களாம்.

இதனைக் கேட்டு நடிகர் தனுஷ் குழம்பிப் போய் உள்ளாராம். ஏனெனில், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த நடிகர் தனுஷ், கடந்தாண்டு தான் அவரை விவாகரத்து செய்தார். தனது இரு மகன்களின் மூலம் மட்டுமே ரஜினி குடும்பத்துடன் அவருக்கான தொடர்பு இருந்து வருகிறது. தற்போது, அரசியலுக்காக, ரஜினியின் தயவை நடிகர் தனுஷ் எதிர்பார்ப்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

திமுக சிந்தனை

இதனிடையே, நடிகர் ரஜினி, விஜய்யின் தவெகவை நேரடியாக எதிர்த்து வருகிறார். தேர்தலில் தோல்வியடைந்த திமுக தலைவர் ஸ்டாலினை ரஜினி நேரில் சந்தித்து பேசி, மறைமுக ஆதரவை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக, அரசியலில் தான் தவறவிட்ட இடத்தை விஜய் பிடித்து விட்டதால் ரஜினிக்கு கோபம் ஏற்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதேவேளையில், தனது உறவுக்காரரும், பாடகருமான அனிருத்திற்கு, திமுக குடும்ப உறுப்பினரும், சன்டிவி குழு உரிமையாளருமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்து வைப்பதற்காகவே, ஸ்டாலின் குடும்பத்திடம் ரஜினி நெருங்கிப் பழகியதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

உள்நோக்கமா?

இப்படிப்பட்ட சூழலில், குடும்ப பிரச்சினைகளை கடந்து, அரசியல் எதிர்காலத்திற்காக, நடிகரும், முன்னாள் மாமனாருமான ரஜினியிடம் தனுஷ் ஆதரவு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் தனுஷ், ரஜினியின் மிகப்பெரிய ரசிகராவார். அவரது படம் எப்போது எல்லாம் ரிலீஸாகிறதோ, அதை முதல் நாளிலேயே பார்த்து விடுவார். அப்படித்தான், அண்மையில் வெளியான ஜெயிலர் 2 படத்தையும் அவர் பார்த்து ரசித்தார். இத்தனை நாட்கள் அவர் படம் பார்த்ததற்கு இருந்த பின்னணியைத் தாண்டி, இந்த முறை ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ? என்ற பேச்சுக்களும் அடிபடுகின்றன.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

கோ-கோ விளையாட்டைக் காப்பாற்றுங்கள்! மாவட்ட ஆட்சியரிடம் பயிற்சியாளர் மனு!

தமிழ்நாட்டில் கோ-கோ விளையாட்டுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், போலிச் சான்றிதழ்கள் மற்றும் போட்டி முறைகேடுகள் தொடர்பாகவும் பயிற்சியாளர் முருகவேல் புகார் தெரிவித்துள்ளார்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...