கோவை: கோவையில் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் விடுமுறை என்றும் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் நிகழ்வுகளும் வீடுகளுக்குள் மழை நீர் போகும் நிகழ்வுகளும் நிகழ்கின்றன.
கோவை மாநகராட்சி பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் அதனை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மழை பெய்யும் பொழுது பள்ளி மாணவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகவே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சனிக்கிழமை கோவை மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதேபோன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்னும் நான்கு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






