கோவை: POCSO வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்க ஆதரவு நபர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
POCSO வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்க ஆதரவு நபர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான ஆதரவு நபர்கள் (Support Persons)பணியிடங்களின் எண்ணிக்கை-20 ஆகும்
கல்விதகுதி மற்றும் அனுபவம் குழந்தைகள் நலன், சுகாதாரம் அல்லது கல்வி தொடர்பான துறைகளில், குறிப்பாக சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தை வளர்ச்சிஅல்லது குழந்தைகள் நலனுடன் தொடர்புடைய பிற பொருத்தமான துறைகளில் முதுகலைப் பட்டம்பெற்ற எந்தவொரு நபரும் விண்ணப்பிக்கலாம். (அல்லது) குழந்தைகள் கல்வி, வளர்ச்சி, சுகாதாரம் அல்லது பாதுகாப்பு தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்
வயதுவரம்பு- 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
ஆதரவு நபரின் பணிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். தகுதியான ஆதரவு நபர்களுக்கு, அவர்களுக்கு வழக்குகள் ஒதுக்கப்பட்டு, அவ்வழக்குகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக மட்டுமே, ஒரு வழக்கிற்கு ரூ.10,000/- வரை மதிப்பூதியம் நான்கு தவணைகளாக ரூ.2500/- வீதம்(பயணச் செலவு உட்பட)வழங்கப்படும்.
வழக்குகள் ஒதுக்கப்படாத காலத்திற்கு எவ்வித மதிப்பூதியமும் வழங்கப்படாது. தகுதியும் ஆர்வமும் உள்ள தனிநபர்கள் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடும் தகுதியான அமைப்புகள், ஆதரவு நபர் (Support Person)பணிக்கான விண்ணப்பப் படிவத்தை https://coimbatore.nic.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து30.11.2026 க்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU), அறை எண்.32, 2வதுதளம், பழையகட்டடம் மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்-641013என்ற முகவரியில்நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.





