கேக் ஊட்டி விட்டு குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய MLA கனிமொழி சந்தோஷ்…

கோவை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்
குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்.

குழந்தைகள் தான் தமிழகத்தின் எதிர்காலம், குழந்தைகள் தினத்தில் நாங்கள் கேட்டுக்கொள்வது நல்ல ஒழுக்கத்துடன், நன்றாக படித்து முன்னேறுவது தான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நீங்கள் கொடுக்க பரிசாக இருக்க வேண்டும் என கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை ஒட்டி அங்கு பயிலும் மாணவ மாணவிகள் 400 பேருக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தமிழக அரசு சார்பில் கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கி அவர்களிடம் உரையாற்றினார்.

Advertisement

நவம்பர் 14ம் நாள் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் குழந்தைகள் தினத்தன்று அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்க தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன் படி சென்னை கொளத்தூரில் மாணவ மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

அதேபோல் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை ஒட்டி அங்கு பயிலும் மாணவ மாணவிகள் 400 பேருக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தமிழக அரசு சார்பில் கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

Advertisement

முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளிடம் பேசும்போது, குழந்தைகள் தின நிகழ்ச்சி என்றாலே நான் ஓடோடி வந்து கலந்து கொள்வேன். அனைவருக்கும் எனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். நமது முதலமைச்சர் அவர்கள் குழந்தைகளின் நலனுக்குத்தான் முன்னுரிமை அளித்து வருகிறார். குழந்தைகளாகிய நீங்கள்தான் தமிழகத்தின் எதிர்காலம். நீங்கள் நன்றாக இருந்தால்தான் தமிழகம் நன்றாக இருக்கும்.

குழந்தைகள் தான் தமிழகத்தின் எதிர்காலம், குழந்தைகள் தினத்தில் நாங்கள் கேட்டுக்கொள்வது நல்ல ஒழுக்கத்துடன், நன்றாக படித்து முன்னேறுவது தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நீங்கள் கொடுக்க பரிசாக இருக்க வேண்டும். இன்றைய குழந்தைகள் சட்டமன்ற நிகழ்வுகளையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு மிகுந்த முதிர்ச்சியுடனும் அறிவாற்றலுடனும் இருக்கிறீர்கள்.

Advertisement

நீங்கள் அனைவரும் ஒரு நல்ல மாணவராகப் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் அவர்களின் விருப்பமும் ஆசையும். அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடனும், தரமான கல்வியுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பதும் முதலமைச்சர் அவர்களின் கனவாக உள்ளது. அந்தக் கனவை நனவாக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

பள்ளிக்குத் தேவையாவை குறித்து மனு அளித்தால் நிகழ்ச்சி முடிவதற்குள் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரும், இடைநிலை மாவட்ட கல்வி அலுவலருமான இளமுருகன் பள்ளிக்குத் தேவையான் வசதிகள் குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட சனிமொழி சந்தோஷ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் அனைவருக்கும் கேக் வழங்கி, அவர்களுடன் குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். அப்போது குழந்தைகள் கனிமொழி சந்தோஷிற்கு குழந்தைகள் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். அதேபோல் அவரும் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி அவர்களுடன் தரையில் அமர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷிற்கு பள்ளி மாணவ மாணவிகள் பூங்கொடுத்து கொடுத்தும், வாயிலில் இருந்து மேடை வரை இருபுறமும் வரிசையாக நின்று கைகளைத் தட்டி சிற்ப்பான வரவேற்பு வழங்கினர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

குடிநீர் விநியோகம் முறையாக இல்லை- வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்…

கோவை: முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி 2-வது வார்டில் உள்ள ஈஸ்வர் பார்க் மற்றும் டி.என்.பி. நகர்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...