குட்டிகளுடன் இருந்த தாய் நாய் தாக்கப்பட்டு உயிரிழப்பு- பால் குடிக்கும் குட்டிகள் தவிப்பு!

​கோவை: கோவைப்புதூரில் குட்டிகளுடன் இருந்த தாய் நாயை ஒருவர் தாக்கிக் கொன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதைத் தட்டிக்கேட்ட பெண்களை அந்த நபர் ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை மாநகரின் குடியிருப்புப் பகுதியான கோவைப்புதூரில், குட்டிகளுடன் இருந்த வாயில்லா ஜீவனான தாய் நாயை நபர் ஒருவர் ஈவு இரக்கமின்றித் தூக்கிப் போட்டு அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும், இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்ட அப்பகுதிப் பெண்களை அந்த நபர் ஒருமையிலும் ஆபாச வார்த்தைகளாலும் திட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன.

கோவைப்புதூர் குடியிருப்புப் பகுதியில் தெரு நாய் ஒன்று அண்மையில் குட்டிகளை ஈன்று, தனது குட்டிகளைப் பராமரித்து வந்து உள்ளது.

Advertisement

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், குட்டிகளுடன் இருந்த அந்தத் தாய் நாயை எந்தவித இரக்கமுமின்றிப் பிடித்துத் தரையில் தூக்கிப் போட்டுக் கொடூரமாகத் தாக்கி உள்ளார்.

​அவரது கண்மூடித்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்த தாய் நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தாயைப் பிரிந்த பச்சிளம் நாய்க்குட்டிகள் உணவின்றித் தவித்து அழும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

Advertisement

நாயைத் தாக்குவதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து, “வாயில்லா ஜீவனை ஏன் இப்படி அடித்துக் கொல்கிறீர்கள் ?” என நியாயமாகத் தட்டிக் கேட்டு உள்ளனர்.

​இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தனது தவறை உணராமல் கேள்வி கேட்ட பெண்களைப் பார்த்து ஒருமையிலும் மிகவும் ஆபாசமான, தரக்குறைவான வார்த்தைகளாலும் திட்டி மிரட்டல் விடுத்து உள்ளார்.

அங்கு இருந்தவர்கள் இந்த சம்பவத்தையும் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளனர்.

தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...