எடப்பாடியின் தலைமை நீடிக்காது! கோவையில் செங்கோட்டையன் பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முன்னாள் காலத்தையும், ஞானத்தையும் எதிர்த்துப் போராட முடியும். ஆனால் காலத்தை எதிர்த்துப் போராட முடியாது. காலம் வைக்கின்ற புள்ளியை யாராலும் அழிக்க முடியாது. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெறுவதும் அதுதான். ஒவ்வொருவராக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். மன்னிக்கும் தன்மையும், பெருந்தன்மையும் இல்லாத தலைமை நீண்ட காலம் நிலைத்த வரலாறு இல்லை. அந்த நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்றார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் பேசியது குறித்த கேள்விக்கு, உறவுமுறை திருமணம் என்பதால் இருவரும் கலந்து கொண்டதாகவும், அங்கு ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டு பொதுவான கருத்துகளைப் பேசினோமே தவிர அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், ஜாக்பாட் ஆட்சியில் வந்ததாகக் கூறுபவர் யார், அதில் தோல்வியடைந்தவர் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். திமுகவுடன் இணைந்து ஜாக்பாட் அடிக்க முயன்றவர் தற்போது தோல்வியடைந்துள்ளார் என்றும் விமர்சித்தார்.

Advertisement

அனிருத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி துடித்துக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் மக்களின் கேள்வி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு, இரண்டு கோடி தொண்டர்கள் இருப்பதாகக் கூறினாலும், அவர்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் வேலுமணி.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் ஆக்குவதற்கு உறுதுணையாக இருந்தவர். யாரையும் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. இதற்குக் காலம் பதில் சொல்லும் என்றார்.

தொடர்ந்து கொங்கு மண்டலம் யாரிடம் உள்ளது என்ற கேள்விக்கு, தற்போது கொங்கு மண்டலம் வெற்றித் தளபதியின் தலைமையில் இருக்கிறது.

தனித்து ஒரு இயக்கமாகப் போட்டியிட்டு 25 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பெருமை தங்களுக்கு உள்ளது. எதிர்காலத்தில் கொங்கு மண்டலம் வெற்றித் தளபதியின் தலைமையில்தான் பயணிக்கும். எடப்பாடி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...