கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டாஸ்மாக் பாரில் காலி பாட்டிலுக்கு ரூ.10 கேட்ட கோகுலகிருஷ்ணனை ஊழியர்கள் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. தலையில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை ஆர்.எஸ்.புரம் லாலி சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், காலி மதுபாட்டிலைத் திருப்பிக் கொடுத்து ரூ.10 கேட்ட கோகுலகிருஷ்ணனை பார் ஊழியர்கள் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. தலையில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆட்டோ ஓட்டுநரான கோகுலகிருஷ்ணன், ஆன்லைன் டெலிவரி பணியும் செய்து வருகிறார். இவர் லாலி சாலையில் ‘மாருதி ஒயின்ஸ்’ என அழைக்கப்படும் டாஸ்மாக் கடையையொட்டிய பாரில் மது அருந்தியுள்ளார்.
பின்னர் காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுத்து ரூ.10 கேட்டபோது, பணத்தை வழங்க பார் ஊழியர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோகுலகிருஷ்ணனுக்கும் பார் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஊழியர்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தின்போது அவரது செல்போனும் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலையில் காயமடைந்த கோகுலகிருஷ்ணனுக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தன்னைத் தாக்கிய பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் டாஸ்மாக் பாரில் காலி பாட்டிலுக்கு ரூ.10 கேட்ட கோகுலகிருஷ்ணனை ஊழியர்கள் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


