கணபதி புதூரில் வீட்டின் கழிவறையில் சடலம் மீட்பு! போலீசார் விசாரணை

கோவை : கோவை கணபதி புதூரில் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கழிவறையில், வெங்கடாசலம் (47) என்பவர் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை மீட்ட சரவணம்பட்டி போலீசார், மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணபதி புதூர் 8-வது வீதி, லட்சுமி விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். மனைவி சத்யாவுடன் (46) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, தனது தம்பியுடன் வசித்து வந்தார். சத்யா, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த வள்ளிபுரத்தில் வசித்து வருகிறார். வெங்கடாசலத்துக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 17-ஆம் தேதி, வெங்கடாசலம் தனது அறையில் அதிக போதையில் இருந்ததை அவரது தம்பி பார்த்துள்ளார். இந்நிலையில், நேற்று வெங்கடாசலத்தின் செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது தம்பி, வீட்டின் முதல் தளத்துக்குச் சென்று பார்த்தார். அப்போது, அங்குள்ள கழிவறையில் வெங்கடாசலம் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டார்.

இதுகுறித்து திருப்பூரில் இருந்த சத்யாவுக்கு வெங்கடாசலத்தின் தம்பி தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். சத்யா உடனடியாக அங்கு வந்தார். பின்னர் சரவணம்பட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை டாஸ்மாக் பாரில் ரூ.10 கேட்டவரைத் தாக்கியதாகப் புகார்! 2 ஊழியர்கள் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் டாஸ்மாக் பாரில் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 கேட்டவரைத் தாக்கியதாக எழுந்த புகாரில், பார் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...