கோவை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,000 மானியம்! மூன்று வட்டாரங்களில் குறுதானிய இயக்கம்

கோவை: கோவையில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் குறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,000 பின்னேற்பு மானியமும், ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீத மானியத்திலும் வழங்கப்படும்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2026-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களுக்குக் குறுதானிய இயக்கத்தை வேளாண்மை–உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே சிறுதானியங்களும் குறுதானியங்களும் குறிப்பிடத்தக்க அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஊட்டச்சத்து மிக்க சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் மற்றும் வரகு, பனிவரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை விரிவுபடுத்துவதுடன், உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதிக விளைச்சல் தரும் புதிய குறுதானிய ரகங்களையும் சாகுபடித் தொழில்நுட்பங்களையும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் மூலம் குறுதானிய உற்பத்தியை உயர்த்தி, விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மானியம் மற்றும் விதைத் தொகுப்பைப் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...