கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி- கோவையில் தடுப்பு நடவடிக்கைகள தீவிரம்…

கோவை: கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கோவையில் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவை மாவட்ட எல்லையில் 12 சோதனைச் சாவடிகளில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு ஆலப்புழா உள்ளிட்ட சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

அதன்படி, கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலந்தாவளம், ஆனைகட்டி உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டு, அங்கு வரும் சரக்கு வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், வாகனங்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கோழிகள் மற்றும் பிற பறவைகளை ஏற்றிவரும் வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் எங்கிருந்து வருகின்றன, நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து வருகின்றனவா, எங்கு செல்கின்றன உள்ளிட்ட விவரங்கள் முழுமையாகச் சேகரிக்கப்படுகின்றன. கோழி சம்பந்தமான எரு இறைச்சி முட்டைகள் எடுத்து வரும் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.

மேலும், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் நோய்த்தொற்று தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் ரூ.25 லட்சம் லாட்டரி பரிசு எனக் கூறி மோசடி! மூன்று சம்பவங்களில் ரூ.5.11 லட்சம் இழப்பு

கோவை மாவட்டத்தில் கேரள லாட்டரியில் ரூ.25 லட்சம் பரிசு விழுந்ததாகக் கூறி 42 வயது நபரிடம் ரூ.2,02,898 மோசடி செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி தொடர்பான மேலும் இரு சம்பவங்களில், இருவரின் வங்கிக் கணக்குகளிலிருந்து மொத்தம் ரூ.3.09 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. மூவரும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...