கோவையில் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல், பதுக்கலைத் தடுக்க 11 தனிப்படைகள் திடீர் சோதனை

கோவை : கோவை மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் 11 தனிப்படைகள் நவம்பர் 21-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தின. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளைச் சோதனையிட்ட போலீசார், கேரள எல்லையை ஒட்டிய சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐ.ஜி. சந்தோஷ் குமார் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலப் பொறுப்பு எஸ்.பி. சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், கோவை சரக டி.எஸ்.பி. மரியமுத்து தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் அலகுகளைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் சோமசுந்தரம், முரளிதரன், ராஜசேகர் ஆகியோர் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்கள் இக்குழுக்களில் இடம்பெற்றனர்.

ஆனைமலை, பொள்ளாச்சி, மதுக்கரை, கோவை தெற்கு, கோவை வடக்கு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வட்டங்களில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான குற்றங்களில் முன்பு ஈடுபட்டவர்கள் மற்றும் காவல்துறையின் குற்ற வரலாற்றுப் பதிவேட்டில் இடம்பெற்றவர்களின் வீடுகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தனர்.

Advertisement

கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க, மாநில எல்லையை ஒட்டிய சோதனைச் சாவடிகளில் வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டன. ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் தொடர்பாகத் தகவல் தெரிந்தால், கோவை அலகு காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்தை 94981 74273 என்ற எண்ணிலும், பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் முரளிதரனை 94981 04646 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். கோவை அலகு அலுவலகத்தின் 93429 60341, பொள்ளாச்சி அலகு அலுவலகத்தின் 89037 67023 ஆகிய எண்களிலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்கும் சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் தகவல் அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கணபதி புதூரில் வீட்டின் கழிவறையில் சடலம் மீட்பு! போலீசார் விசாரணை

கோவை கணபதி புதூரில் வீட்டின் கழிவறையில் அழுகிய நிலையில் கிடந்த வெங்கடாசலத்தின் (47) உடலை மீட்ட சரவணம்பட்டி போலீசார், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...