கோவையில் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு 250 மணி நேர இலவசப் பயிற்சி வகுப்புகள் – விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதியின் அடிப்படையில் SSC, RRB தேர்வுகள் மூலம் ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களும், வங்கிப் பணிகளில் பட்டப்படிப்பு தகுதியின் அடிப்படையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களும் அறிவிக்கப்படுகின்றன.

இத்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 250 மணி நேரம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Advertisement

இந்தப் பயிற்சி வகுப்புகளில் கணிதம், பகுத்தறியும் திறன் (Reasoning), ஆங்கில மொழி ஆகிய பாடங்களுக்கு அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளுக்குக் கணினி அறிவு (Computer Knowledge), வங்கி சார்ந்த பொது அறிவு (Banking Awareness) ஆகியவற்றுக்கும் சிறப்புப் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

மேலும், முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கான பயிற்சி, பாடங்கள் மீளாய்வு (Revision), சந்தேகங்களைத் தெளிவுபடுத்துதல் (Clarification) ஆகியவற்றுக்குத் தனித்தனி வகுப்புகள் நடத்தப்படும். பாடவாரியான தேர்வுகள், குறுந்தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் மூலமாகவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

ஏற்கனவே இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்கள் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம்: [https://forms.gle/GYFTgqtbA3RHeNHA6]
மேலும் விவரங்களுக்கு 0422-2642388, 9499055937, 9499055938, 9865319116, 936576081 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மாவட்டத்தில் தொழில் பங்குதாரர்கள் தேர்வுக்கு ஆண்டு வருவாய் தகுதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக குறைப்பு TANFINET விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் தொழில் பங்குதாரர்கள் தேர்வுக்கு ஆண்டு வருவாய் தகுதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டு TANFINET விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் தமிழ்நாடு கண்ணாடி இழை...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...