கோவைக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் கைவரிசை!

கோவை: ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் தீபேந்திர சிங் (29). இவர் கோவைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்தார்.

Advertisement

இந்த நிலையில் நேற்று அதிகாலை தீபேந்திர சிங் தனது குடும்பத்துடன் லாலி ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், தீபேந்திர சிங்கின் தாயார் வைத்திருந்த கைப்பையை பறித்து தப்பி சென்றார்.

அதில் அவர் 20 கிராம் தங்க செயின், செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பணம் ரூ.9,500 ஆகியவற்றை வைத்திருந்தார்.

பின்னர் இதுகுறித்து தீபேந்திர சிங் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபேந்திர சிங்கின் தாயாரிடம் கைப்பையுடன் நகை, பணத்தை பறித்து தப்பி சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...