கோவை: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவை மக்களின் நம்பர் 1 டூரிஸ்ட் ஸ்பாட்டான கோவை குற்றாலத்திற்கு உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து, அருவியில் ஆனந்தமாய் குளித்தும், ஒரு குட்டி டிரெக்கிங்கும் மேற்கொள்கின்றனர்.
கோடை சீசனை முன்னிட்டு கோவை குற்றாலம் செல்லும் சாலைகள், அருவி அருகே உள்ள தடுப்புகள் சரி செய்யப்பட்டன.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கோவை குற்றாலத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது. தினமும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் கோவை குற்றாலம் வந்து செல்கின்றனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் மக்கள் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் நீர் வீழ்ச்சிக்குச் சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டன. வனத்துறையினர் அருவி அருகே கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
