காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி: கோவையில் சிறப்பு ஹோமம்!

கோவை: காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பேரூர் மகா பெரியவர் மணிமண்டபத்தில், ஹோமம், பாராயணம், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி தினம், பேரூர் காஞ்சி பெரியவர் மணி மண்டபத்திலுள்ள ஸாம வேத பாராயண டிரஸ்ட் சார்பாக கடந்த மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வேத வேதபாராயணம் செய்யப்பட்டது. மேலும், சங்கீர்த்தனம், அன்னதானம் உள்பட பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவர் அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை அழிக்கும் முடிவில் பாஜக வெற்றி பெற்றது- கோவையில் புகழேந்தி விமர்சனம்…

கோவை: அதிமுகவை அழிக்கும் முடிவில் பாஜக வெற்றி கண்டது என புகழேந்தி தெரிவித்துள்ளார். புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...