கோவை காப்பகத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் பலி!

கோவை: கோவை காப்பகத்தில் அடுத்தடுத்து 2 முதியவர்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு கேரளாவைச் சேர்ந்த கமலம்மாள் (68) மற்றும் சாலையோரத்தில் ஆதரவின்றி இருந்த சுப்புலட்சுமி (70) ஆகியோர் சேர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் நேற்று இரவு 1.00 மணியளவில் சுப்புலட்சுமி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மதியம் 1.50 மணியளவில் கமலம்மாளும் உயிரிழந்தார். இதுகுறித்து காப்பகம் நிர்வாகிகள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த 2 மூதாட்டிகளின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Recent News