Header Top Ad
Header Top Ad

வடவள்ளியில் அழுகிய நிலையில் மருந்துக் கடைக்காரர் உடல் மீட்பு!

கோவை: வடவள்ளியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் மருந்துக் கடை உரிமையாளர் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளி வி.கே.எஸ் நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42). இவர் காந்திபுரத்தில் மருந்துக் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொழில் நஷ்டம் காரணமாக ஹரிகிருஷ்ணன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஹரிகிருஷ்ணனின் வீட்டின் மேல் தளத்தில் குடியிருந்து வரும் ரேவதி என்பவர் ஹரிகிருஷ்ணனின் தாயார் திரிபுரசுந்தரிக்கு போனில் அழைத்து ஹரிகிருஷ்ணன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

உடனே திரிபுரசுந்தரி மருந்துக் கடையில் வேலை செய்யும் ஜெயகுமார் என்பவரிடம் ஹரிகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் வீட்டிற்குச் சென்று கதவை வெகு நேரம் தட்டிப் பார்த்தார்.

ஹரிகிருஷ்ணன் கதவைத் திறக்காததால் ஜெயகுமார் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு ஹரிகிருஷ்ணன் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News