Header Top Ad
Header Top Ad

பாடங்கள் மட்டுமல்ல… இதனையும் கற்றுக்கொடுங்கள்! கோவையில் ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் மகேஷ் பேச்சு!

கோவை: பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் பல்வேறு விஷயங்களையும் கற்று தர வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் உயிர் எனும் சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து உயிர் குட்டி காவலர் சாலை பாதுகாப்பு பாடத்திட்டம் சார்பில் மாணவர்கள் பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீட்டு விழா நடத்தினர்.

இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேட்டை வழங்கினார்.
இதில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேட்டை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், சாலை பாதுகாப்பு குறித்தும் சாலையில் வாகனம் ஓட்டும் பொழுதும் சாலையில் நடந்து செல்லும் பொழுதும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் சாலை விதிகள் குறித்து பள்ளி பருவத்திலேயே விழிப்புணர்வு தர வேண்டும் என்ற விதத்தில் இதனை கொண்டு வந்திருப்பதாகவும் ஆசிரியர்கள் நினைத்தால் இதனை வெற்றிகரமான திட்டமாக கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.

சாலை விதிகளை பின்பற்றுவது வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் பொருந்தும் என்றார். வெளியூர் செல்லும் பொழுது எப்படி பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறோமோ அது போன்று நம் ஊரிலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பள்ளிகளில் பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் இது போன்று விஷயங்களுக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியில் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

Recent News