Header Top Ad
Header Top Ad

கோவை ரெட் டாக்சி நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு

கோவை: கோவை ரெட் டாக்சி நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரெட் டாக்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கலாம்:-

பணியிடம்: Customer Relationship Executive

பொறுப்புகள்:

வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் கேள்விகளை கையாளுதல்
சிக்கலான நிலைகளை மேல் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்வது
அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் அழைப்புகளைக் கையாளுதல்
அழைப்பு விவரங்களைப் பதிவு செய்தல்
தேவையான நேரத்தில் வாடிக்கையாளர்களை மீண்டும் தொடர்பு கொள்ளுதல்
வாடிக்கையாளர் கேள்விகளுக்கு நேரத்துக்குள், தரமான பதில் வழங்குதல்

தகுதிகள் மற்றும் திறன்கள்:

Advertisement

ஏதேனும் பட்டம் (Any Degree)
தொடர்புடைய துறையில் 0–5 ஆண்டுகள் அனுபவம்
வாடிக்கையாளர் சேவை தொடர்பான அறிவும் நடைமுறைகளும்
சிறந்த தட்டச்சு திறன்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும், எழுதும், கேட்கும் திறன்

ஊதியம்: ரூ.15,000 ஆயிரம் முதல் ரூ.25,000

ஆர்வமுள்ளவர்கள் https://www.redtaxi.co.in/career-apply என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்

Recent News