கோவையில் ஆட்டோவுக்குள் உயிரிழந்த ஓட்டுனர்!

கோவை: கோவையில் ஆட்டோவுக்குள் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: போத்தனூரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(54). ஆட்டோ டிரைவர். திருமணமான இவர் கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு அம்மன்குளம் பகுதிக்கு சவாரி சென்றார்.

அப்போது அவர் ஆட்டோவுக்குள் திடீரென சுயநினைவை இழந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Recent News

Video

Join WhatsApp