Header Top Ad
Header Top Ad

கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

கோவை: கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

அதனை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

கோவை விமான நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 0.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisement

Single Content Ad

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1.50 மில்லி மீட்டர், பில்லூர் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மில்லி மீட்டர், கோவை தெற்கு தாலுகா அலுவலக சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 8 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 18 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுகாவில் 9 மில்லி மீட்டர், போத்தனூர் ரயில் நிலைய சுற்று வட்டார பகுதிகளில் 12.45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பொள்ளாச்சி தாலுகாவில் ஒரு மில்லி மீட்டர், கிணத்துக்கடவு தாலுகாவில் 2 மில்லி மீட்டர், ஆனைமலை தாலுகாவில் ஒரு மில்லி மீட்டர், ஆழியாறில் 2.80 மில்லி மீட்டர், சின்கோனா (வால்பாறை) சுற்றுவட்டாரங்களில் 37 மில்லி மீட்டர், சின்னக்கல்லாரில் 55 மில்லி மீட்டர், வால்பாறை பி.ஏ.பி திட்டப்பகுதிகளில் 37 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 35 மில்லி மீட்டர், சோலையாரில் 52 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 274.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது சராசரியாக 11.94 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

Recent News

Single Sidebar Ad

Latest Articles