கோவையில் பள்ளி புத்தகங்களில் சாதி மத அடையாளங்கள்… ஆட்சியரிடம் மனு!

கோவை: பள்ளிகளில் மாணவர்களின் வீட்டுப்பட dairy-ல் சாதி, மதம் அடையாளகளை குறிப்பிட கோருவதை தடை செய்திட வேண்டும் என தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தினர் மனு அளித்துள்ளனர்….

Advertisement

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வீட்டுப்பாட குறிபேட்டில் சாதி, மத விவரங்களை குறிப்பிடும் படியாக படிவங்களை உருவாக்கி கட்டாயம் அந்த விவரங்களை குறிப்பிடும் படி மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துவதாக தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாதி மத அடையாளங்கள் இடஒதுக்கீட்டு உரிமைகளை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிற நிலையில் அத்தகைய விபரங்களை பள்ளி மாணவர்களின் குறிபேட்டில் வெளிப்படையாக குறிப்பிட வைப்பதென்பது மாணவர்களிடையே சாதி மத உணர்வுகளை தூண்டுகின்ற தீண்டாமை உள்ளிட்ட பாகுபாடு உணர்வுகளை தூண்டுகிற நடவடிக்கையாக அமையும் என்றும் எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video